கஞ்சா கடத்திய 4 பேர் கைது


கஞ்சா கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2022 10:30 PM IST (Updated: 1 April 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சங்கராபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை போலீசார் மடக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் (வயது 57), இவருடைய மனைவி இளையராணி (44), சங்கராபுரத்தை சேர்ந்த பார்த்திபன் மகன் பரத் (22), சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் தினகரன் (24) ஆகியோர் என்பதும், கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயராமன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story