போக்குவரத்து போலீசார் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் தொப்பிகள் வழங்கி டி.ஐ.ஜி. அறிவுரை


போக்குவரத்து போலீசார் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் தொப்பிகள் வழங்கி டி.ஐ.ஜி. அறிவுரை
x
தினத்தந்தி 1 April 2022 10:30 PM IST (Updated: 1 April 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

கோடை வெயிலில் இருந்து போக்குவரத்து போலீசார் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தொப்பிகள் வழங்கி டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தெரிவித்தார்.

வேலூர்

கோடை வெயிலில் இருந்து போக்குவரத்து போலீசார் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தொப்பிகள் வழங்கி டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தெரிவித்தார்.

தொப்பி வழங்கும் நிகழ்ச்சி

வேலூரில் கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலூர் மாநகர பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானங்கள் வழங்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வேலூர் நேதாஜி மைதானத்தில் போக்குவரத்து போலீசார் உள்பட வெயிலில் பணியாற்றக்கூடிய போலீசார் 150 பேருக்கு தொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு தொப்பிகளை வழங்கினார். மேலும் அவர்களுக்கு குளிர்பானங்களும் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பேசியதாவது:-

உடல்நலனை..

போலீஸ் பிரிவில் போக்குவரத்து காவல் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து சேவை செய்து வருகிறீர்கள். வெயில் காலத்தில் போக்குவரத்து போலீசார் தங்களது உடல் நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏற்பாட்டின் பேரில் தற்போது அனைவருக்கும் வெயிலை சமாளிக்க கூடிய வகையில் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தினமும் 2 வேளை மோர், பழச்சாறுகள் போன்றவை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story