கடலூரில் வ உ சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி வாகனம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
கடலூரில் வ உ சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
கடலூர்
புகைப்பட கண்காட்சி வாகனம்
சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றிடும் வகையிலும், வ.உ.சிதம்பரனாரின் 150 -வது பிறந்த நாளை முன் னிட்டு, அவரை இன்றைய தலைமுறையினர் அறிந்திடும் வகையிலும், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புகைப்பட கண்காட்சி வாகனம் அமைக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த வாகனம் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கடலூர் வந்தது.
கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த இந்த வாகனத்தை மாவட்ட கலெக்டர் வரவேற்று, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கலெக்டர் பார்வையிட்டார்
முன்னதாக வாகனத்தில் இருந்த வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து, அவரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள், இந்த வாகனத்தில் வ.உ.சிம்பரனார் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்த வாகனம் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்கிறது.
வாழ்க்கை வரலாறு
அப்போது வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை பள்ளி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விடுதலைக்காக அவர் ஆற்றிய பங்கு, அவர் சிறையில் அடைக்கப்பட்ட காலங்கள், வாழ்க்கை வரலாறு குறித்த குறிப்புகள் மற்றும் அரியவகை புகைப்படங்கள் இந்த வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி மற்றும் அலுவலர்கள், மாணவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story