மகா காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம்


மகா காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம்
x
தினத்தந்தி 1 April 2022 10:39 PM IST (Updated: 1 April 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் மகா காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம்

குத்தாலம்:
 குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 20-ந் தேதி சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி, இரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. இதை தொடர்ந்து மகா காளியம்மன் திருநடன உற்சவம் நடந்தது. முன்னதாக காளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா நடந்தது. காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு நாயக்கர் தோட்டம், சாலியத் தெரு உள்ளிட்ட முக்கிய வழியாக சென்றது. இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு திருநடன நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து வருகிற 7-ந்தேதி(வியாழக்கிழமை) வரை 8 நாட்கள் காளியாட்டம் எனப்படும் மகா காளியம்மன் திருநடன உற்சவம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காளியம்மன் கோவில் தெருவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Next Story