மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கரூர்
கரூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, உள்ளடங்கிய கல்வி திட்டம் சார்பில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வருகிற 4-ந்தேதி கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 5-ந்தேதி க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 6-ந்தேதி அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 7-ந்தேதி லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 8-ந்தேதி தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 9-ந்தேதி தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இதனையொட்டி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு உதவி திட்ட அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலமானது கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி ஜவகர்பஜார், மனோகரா கார்னர் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யாவதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story