ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு புத்துணர்வு பயிற்சி
ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு புத்துணர்வு பயிற்சி நடந்தது.
தோகைமலை,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு புத்துணர்வு பயிற்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றிய ஆணையர் (கிராம வளர்ச்சி) சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம ஊராட்சியில் பாதுகாப்பு, கிராம ஊராட்சியில் மருத்துவ நல வாழ்வு சேவை மேம்படுத்துதல், கிராம ஊராட்சியில் ஊட்டச்சத்து அமைப்புக்கான மேம்படுத்துதல், கிராம ஊராட்சிகளின் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, பாலின சமத்துவத்திற்கான தொகுப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்ட முதன்மை பயிற்றுனர் வடிவேல், பயிற்றுனர் அண்ணாத்துரை, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story