கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 1 April 2022 10:59 PM IST (Updated: 1 April 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

இரணியல் ரெயில் நிலையம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திங்கள்சந்தை:
இரணியல் ரெயில் நிலையம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இரணியல் ரெயில் நிலையம் அருகே சாக்கு மூட்டைகள் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, மூடைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அவற்றில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அரிசியை கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story