விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று முன்தினம் மாலை தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், கரும்பு வெட்டி முடித்த 15 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், உடனடியாக விவசாயிகளுக்கு பணம் வழங்க ஆவண செய்ய வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக உடனடியாக அறிவிக்க வேண்டும், விவசாயம் சார்ந்த பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி அதற்கு ஏற்றவாறு அரசு மானியம் வழங்க வேண்டும், விவசாயிகளின் பிள்ளைகள் மேற்படிப்புக்கு அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன போன்ற 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் பாச.பரிமலம் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாநில செயலாளர் லிங்கம், மாவட்ட தலைவர் காண்டீபன், செயலாளர் செந்தில் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் இவர்கள் அனைவரும் அங்கிருந்து பேரணியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story