நியமன குழு, மேல் முறையீட்டுகுழு உறுப்பினர்கள் தேர்வு
செஞ்சி பேரூராட்சியில் நியமன குழு, மேல் முறையீட்டுகுழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனா்.
செஞ்சி,
செஞ்சி சிறப்புநிலை பேரூராட்சியில் நியமன குழு மற்றும் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் செயல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி நியமனக் குழு உறுப்பினராக மன்ற உறுப்பினர் கார்த்திக் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக மன்ற உறுப்பினர்கள் சங்கர், ஜான்பாஷா, சிவகுமார், எம்.பி.ஆர்.மோகன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அப்போது பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அஞ்சலை நெடுஞ்செழியன், லட்சுமி வெங்கடேசன், சீனுவாசன், சுமித்ராசங்கர், பொன்னம்பலம், அகல்யா வேலு, புவனேஸ்வரி அண்ணாதுரை, சந்திரா, சங்கீதா சுந்தரமூர்த்தி, மகாலட்சுமி கமலநாதன், நூர்ஜகான் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story