ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100 போலீசார் பணியிட மாற்றம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100 போலீசார் பணியிட பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற இரண்டாம் நிலை காவலர் முதல் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரையில் பணிமாறுதல் குறித்து நேர்காணல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமை தாங்கினார்.
இந்த நேர்காணலில் மாவட்டத்திற்குள் பணிமாறுதல் கோரியிருந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் -23, போலீஸ் ஏட்டுகள் - 12, முதல் நிலை காவலர்கள்-33, இரண்டாம் நிலை காவலர்கள்-32 பேர் ஆக மொத்தம் 100 பேருக்கு பணிமாறுதல் ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
Related Tags :
Next Story