பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
திற்பரப்பு அருகே பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
குலசேகரம்:
திற்பரப்பு அருகே பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து திற்பரப்பு அருகே பிணந்தோடு சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு திற்பரப்பு நகர காங்கிரஸ் தலைவர் எட்வின் தலைமை தாங்கினார். திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளீட்டஸ் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் சிறப்புரையாற்றினார். திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, வார்டு கவுன்சிலர்கள் ஜெயகுமாரி, ராஜப்பன், வட்டார செயலாளர்கள் ராஜமணி, ஆல்பன், மோன்சி சாமுவேல், சுரேஷ், அயக்கோடு நகர தலைவர் வினுடிராய், திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
---
Related Tags :
Next Story