சேதமடைந்த பொன்னியம்மன் கோவிலுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே பழையனூரில் சேதமடைந்த பொன்னியம்மன் கோவிலுக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே பழையனூரில் சேதமடைந்த பொன்னியம்மன் கோவிலுக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னியம்மன் கோவில்
கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் தாமரைக்குளம் தெரு அருகே பழமை வாய்ந்த பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் அந்த பகுதி மக்கள் இன்றும் வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது இந்த கோவில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கோவில் கருவறையை பாதுகாக்க வேண்டிய கட்டிடம் சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆனாலும் அந்த பகுதி மக்கள் சிரமத்துடன் கோவிலின் உள்பகுதியில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
இக்கோவிலில் இரண்டு கால பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது. சேதமடைந்த கோவில் இன்று வரை வழிபாடு நடத்தப்படும் கோவிலாக உள்ளது. எனவே சேதமடைந்த கோவில் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கோவில் கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story