மாநில அரசு வாட் வரியை குறைத்ததால்- மும்பையில் சி.என்.ஜி., பி.என்.ஜி. விலை குறைந்தது
மாநில அரசு வாட் வரியை குறைத்ததை அடுத்து மும்பையில் சி.என்.ஜி., பி.என்.ஜி. விலை குறைந்து உள்ளது.
மும்பை,
மாநில அரசு வாட் வரியை குறைத்ததை அடுத்து மும்பையில் சி.என்.ஜி., பி.என்.ஜி. விலை குறைந்து உள்ளது.
வாட் வரி குறைப்பு
மும்பை பெருநகரில் மகாநகர் கியாஸ் நிறுவனம் வாகனங்களுக்கான சி.என்.ஜி., வீட்டு உபயோகத்திற்கான பி.என்.ஜி. கியாஸ் வினியோகத்தில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் - ரஷியா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்ந்து உள்ளது.
எனவே பொது மக்களின் சுமையை குறைக்க மாநில அரசு கியாசுக்கான வாட் வரியை 13.5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைத்து உள்ளது.
விலை குறைந்தது
இதையடுத்து மகாநகர் கியாஸ் நிறுவனம் சி.என்.ஜி., பி.என்.ஜி. விலையை குறைத்து இருக்கிறது. இதன்படி சி.என்.ஜி. விலை கிலோவுக்கு ரூ.6 குறைந்து ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல பி.என்.ஜி. விலை ரூ.3.50 குறைந்து யூனிட் ரூ.36 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.
Related Tags :
Next Story