2 ஆண்டுக்கு பிறகு மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்
2 ஆண்டுக்கு பிறகு மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் 2 ஆண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. ஊஞ்சலில் அமர்ந்து அங்காளபரமேஸ்வரி அம்மன் அருள்பாலித்ததையும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டதையும் படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story