மாற்றுக்கட்சியினர் 100 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


மாற்றுக்கட்சியினர் 100 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
x
தினத்தந்தி 1 April 2022 11:20 PM IST (Updated: 1 April 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூரில் மாற்றுக்கட்சியினர் 100 பேர் அ.தி.மு.க.வினர் இணைந்தனர்.

கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூரில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் நகர செயலாளர் பசீர் அகமது, துணை செயலாளர் உதயகுமார், நகர எம். ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் மற்றும் அ.தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story