வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 1 April 2022 11:26 PM IST (Updated: 1 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 
கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட மைய தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலகர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சண்முகபிரகாசம், வட்டாட்சியர்கள் சிவகுமார், மகுடீஸ்வரன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், நேரடி நியமன உதவியாளர்களுக்கு அமைச்சுப்பணி சிறப்பு விதி படி வருவாய் ஆய்வாளர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் 5 ஆண்டுகளுக்குள் முறையாக வழங்க வேண்டும், மேலும் 5 ஆண்டுகள் பயிற்சி முடித்த நேரடி நியமன உதவியாளர்களுக்கு பயிற்சி முடிவுற்றவுடன் பிஆர்ஓ டிடி பெயர் மாற்றம் செய்து உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 8.4.2009 முதல் துணை வட்டாட்சியர் பட்டியல்கள் மறுவரைவு செய்து அதனடிப்படையில் திருத்திய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பட்டியல்கள் வெளியிடப்பட வேண்டும். 2019-ம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் தகுதியான நபர்களுக்கு துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலை வெளியிட வேண்டும். அனைத்து சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு பணியிடமும் மற்றும் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு பணியிடமும் புதிதாக உருவாக்க வேண்டும். சி.பி.எஸ். ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடன் அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.


Next Story