சாலை விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 1 April 2022 11:27 PM IST (Updated: 1 April 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணராயபுரம், 
மும்பையை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். இவரது மகன் அகிலேஷ் குமார் (வயது 25). இவர் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி டேங்கர் லாரி ஒன்றை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அரசு பஸ் ஒன்று திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாலாபேட்டை அடுத்த மகாதானபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டேங்கர் லாரி திடீரென நின்றது. இதனால் அரசு பஸ்சும் நின்றது. அப்போது பஸ்சுக்கு பின்னால் வந்த தாய் சேய் நல ஊர்தி கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்பக்கம் மோதியது. 
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மண்ணச்சநல்லூர் சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 55), மதுரையை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (32), திண்டுக்கல்லை சேர்ந்த மாரிமுத்து (51), திருச்சி பாலக்கரை சேர்ந்த பாத்திமாபீபி (55), பெட்டவாய்த்தலையை சேர்ந்த லட்சுமி (49), குளித்தலை சேர்ந்த மாரியாயி (55), தாய் சேய் நல ஊர்தி டிரைவர் திண்டுக்கல்லை சேர்ந்த சுலாசிங் (29) ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சுந்தர்ராஜன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story