மான்கொம்பு வைத்திருந்த ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் இணக்க கட்டணம்
மான் கொம்பு ைவத்திருந்த ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது.
தொண்டி,
திருவாடானை தாலுகா கடம்பூர் தெற்கு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 28).ஆசிரியர். இவரது வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள சந்தில் ஒரு சாக்குப்பையில் மான்கொம்பு இருந்தது ெதரிய வந்தது. இதையடுத்து அதை கைப்பற்றி ஆசிரியர் பழனியிடம் ஆர்.எஸ்.மங்கலம் வனத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது தனக்கும், மான் கொம்புக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. யாரோ பழி வாங்குவதற்காக என்னை மாட்டி விட்டு உள்ளனர் என தெரிவித்தார். இதையடுத்து வனத்துறை சமரச சட்டம்படி ரூ.15 ஆயிரம் இணக்க கட்டணத்தை ஆசிரியர் செலுத்தியதை தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஸ் சுதாகர், வனச்சரக அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story