மின்கம்பிகளை திருடிய 2 பேர் கைது
சாயல்குடியில் மின்கம்பிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சாயல்குடி,
சாயல்குடி கிழக்கு கடற்கரைச்சாலை பகுதியில் போலீஸ் ஏட்டுகள் தங்கச்சாமி, சந்தன குமார் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் சாயல்குடி நோக்கி வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சாயல்குடி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் பூப்பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டை முனியசாமி (வயது 34), மற்றொரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேர் என்பதும், மின்கம்பிகளை திருடி வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மின்கம்பிகள், சரக்கு வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story