லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 1 April 2022 11:41 PM IST (Updated: 1 April 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தோகைமலை, 
தோகைமலை கடைவீதி மற்றும் ஆர்.டி.மலை பஸ் நிறுத்தம் பகுதிகளில் தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் எண்களை வெள்ளைத்தாளில் எழுதி விற்றுக்கொண்டிருந்த தோகைமலை கடைவீதியை சேர்ந்த சோமாஸ் (வயது 62), ஆர்.டி.மலை தெற்கு தெருவை சேர்ந்த வேலு (58) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story