பர்கூர் ஐஇஎல்சி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்ல நிதியுதவி மதியழகன் எம்எல்ஏ வழங்கினார்
பர்கூர் ஐ.இ.எல்.சி. பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்ல நிதியுதவியை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
பர்கூர்:
பர்கூர் ஐ.இ.எல்.சி. பார்வையற்றோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 86 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் தனித்திறன் மேம்பட சுற்றுலா அழைத்து செல்லப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படவில்லை. இந்த கல்வியாண்டில் மாணவர்களை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை அழைத்து சென்று அங்குள்ள சிற்பங்கள், கோட்டை, பண்டைய மன்னர்களின் வரலாற்றை அறியும்படி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தனர். அதற்கான நிதி ஆதாரம் இல்லை என்பதால் பர்கூர் எம்.எல்.ஏ. டி.மதியழகனிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர். தொடர்ந்து பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்ல ரூ.50 ஆயிரத்தை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
Related Tags :
Next Story