ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம்
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம் நடந்தது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மகா குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பூரட்டாதி நட்சத்திரத்தையொட்டி மகா குபேரனுக்கு சிறப்பு ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு விமரிசையாக நடந்தது. ஹோமம், அபிஷேகம், பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதில் பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மகாகுபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றி தரிசனம் செய்தனர். மகா குபேர ஹோமத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு பச்சை குங்கும பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story