தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தடுப்பு சுவர் தேவை
நாகர்கோவில் மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட ஆளூர் ரெயில்வே கேட்டின் கீழ்ப்பகுதியில் சாலையோரம் வீரா குளம் உள்ளது. சாலையோரம் உள்ள இந்த குளத்தின் கரை பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி குளத்தின் கரை பகுதியில் சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.டி.கோமதிவிநாயகம், புதுத்தெரு, ஆளூர்.
சீரமைக்கப்படுமா?
திருவிதாங்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டில் செட்டியார்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தரைகற்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த அலங்கார தரை கற்களை சீரமைப்பார்களா?.
-கே.அனிஷ், செட்டியார்விளை.
எரியாத விளக்கு
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பில் இருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையில் சிரோமணி நகர் தெரு உள்ளது. இந்த தெருவின் முடிவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த பகுதியில் பெண்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை அமைத்து எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஞானசிரோமணி, சிரோமணிநகர்.
சேதமடைந்த கழிவுநீர் ஓடை
குலசேகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நாகக்கோட்டில் இருந்து திருவரம்பு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையின் பக்கச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த ஓடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோண் சந்தியா, நாகக்கோடு.
வீணாகும் குடிநீர்
அழகியமண்டபம்-மார்த்தாண்டம் சாலையில் சிராயன்குழி உள்ளது. இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் எஸ்.எல்.பி. அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடையின் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளியின் காம்பவுண்டு சுவர் சாய்ந்த நிலையில் அதற்கு மரத்தடியால் முட்டுக்கொடுக்கப்பட்டு காணப்படுகிறது. சாலையோரம் அந்த ஓடையின் அருகில் நடைபாதை உள்ளது. அதில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் நடந்து செல்வார்கள். சுவர் இடிந்து சாலை பகுதியில் விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் சேதமடைந்த சுவரை அகற்றி விட்டு புதிய சுவரை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜகுமார், வெட்டூர்ணிமடம்.
Related Tags :
Next Story