குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2022 11:54 PM IST (Updated: 1 April 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அழகர். இவருடைய மகன் பாபு (வயது 32). இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போட்டு வந்தாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுகுடித்துவிட்டு வந்து சண்டைபோட்டபோது மனைவி லட்சுமி கோபித்து கொண்டு அருகில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டாராம். இதனால் மனம் உடைந்த பாபு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அழகர் (58) அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story