கல்லூரி மாணவர் தற்கொலை


கல்லூரி மாணவர் தற்கொலை
x

ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள பால்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்.இவருடைய மகன் சம்பத் (வயது22).தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் 3 நாட்களாக இருந்து வந்துள்ளார். இதனை கண்ட பெற்றோர் ஏன் என்று காரணம் கேட்டபோது ஒன்றும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் கோவிந்தனேந்தல் கண்மாய் பகுதியில் தேடிப்பார்த்தபோது மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அவரின் தந்தை ஜெகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story