ஆதிசக்தி ராஜராேஜஸ்வரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்
பரமக்குடி அருகே ஆதிசக்தி ராஜராேஜஸ்வரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் ஆதிசக்தி ராஜராஜேஸ்வரி சக்தி பீடம் உள்ளது. அங்குள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பங்குனி மாத ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதையொட்டி உலக நன்மைக்காகவும், கொடிய நோய்களில் இருந்து மக்கள் விடுபடவும் சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்பு கோவிலின் மேனேஜிங் டிரஸ்டி விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் ஏராளமான பக்தர்கள் ஆதிசக்தி ராஜராஜேஸ்வரி அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story