கல் குவாரி லாரி மோதி வாலிபர் கால் முறிந்தது பொதுமக்கள் சாலை மறியல்
கல், குவாரி லாரி மோதி வாலிபரின் கால் முறிந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
கல், குவாரி லாரி மோதி வாலிபரின் கால் முறிந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசியை அடுத்த புதூர் கிராமத்தில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று மாலையிட்டான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகிய வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் புதூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர் அப்போது கல் குவாரியில் இருந்து வந்த லாரி ஒன்று சக்தி மீது மோதியதில் கால் முறிந்து அவர் படுகாயம் அடைந்தார். வெங்கடேசன் விபத்திலிருந்து தப்பினார்.
படுகாயம் அடைந்த வாலிபர் சக்தியைஅந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்குவாரிக்கு சொந்தமான லாரிகள் மாலையிட்டான் குப்பம் கிராமம் வழியாக வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் புதூர் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். விபத்துகளை தடுக்க மாலையிட்டான் குப்பம் கிராமம் வழியாக கல்குவாரி லாரிகள் செல்லக்கூடாது என்றும் படுகாயமடைந்த சக்திக்குஉரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 3 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையாக நின்றது.
தகவலறிந்த வந்தவாசி போலீஸ் துணை சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கல்குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story