புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு பயிற்சி


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 2 April 2022 12:20 AM IST (Updated: 2 April 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகா்கோவில்:
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு 2-ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு 200 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசுகையில், போலீஸ் பணி என்பது உன்னதமான பணி. எனவே போலீசார் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். பயிற்சியில் கஷ்டங்கள் இருக்கும். அதை மகிழ்ச்சியோடு ஏற்று செய்ய வேண்டும். போலீஸ் அல்லது போலீசின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தை அணுகும்போது போலீசார் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதே போல் நீங்களும் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும். மாதம்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தி குறைகள் தீர்த்து வைக்கப்படும். சிறப்பாக செயல்பட்டு தமிழக காவல்துறைக்கு நல்ல பெயர் பெற்று தர வேண்டும், என்றார்.

Next Story