தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 April 2022 12:42 AM IST (Updated: 2 April 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு

குடிநீா் தட்டுப்பாடு
மதுரை மாநகராட்சி 30-வது வார்டுக்குட்பட்ட மதிச்சியம் முத்து தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே  குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி, மதுரை.
 சாலை 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து எரிச்சநத்தம் ெசல்லும் சாலை ேசதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவா்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி சிறு,சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
ரவிக்குமார், சிவகாசி.
நடவடிக்கை எடுப்பார்களா?
ராமநாதபுரம் நகர் கோட்டைமேடு தெரு பகுதிகளில் தெருநாய்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை பயமுறுத்துவதுடன் இருசக்கர வாகனங்களில் செல்வபர்களை துரத்துவதால் விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கோட்டைமேடு.
திறக்கப்படாத கழிவறை 
விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி பின்புறம் கட்டப்பட்ட கழிவறை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கழிவறை வசதி இல்லாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால் இந்த கழிவறையை மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகி, மகாராஜபுரம். 
குறுகலான சாலை 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து கோட்டையூர், எஸ்.எஸ். கோட்டை வழியாக செல்லும் சாைல மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் இந்த சாலையில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் சிறு,சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே இந்த சாலையை விரிவாக்கம் செய்து விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
ராஜன், திருப்பத்தூர். 
கூடுதல் பஸ் தேவை
மதுரை திருமங்கலத்திற்குட்பட்ட ஊமச்சிகுளத்திலிருந்து திருப்பாலைக்கு குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பஸ்சுக்காக பல மணி நேரம்  வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால தாமதம் ஏற்பட்டு தங்களின் அன்றாட வேலை பாதிக்கப்படுகின்றது. இப்பகுதி மக்களின் நலன் கருதி கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம்குமார், திருமங்கலம். 

Next Story