கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது


கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2022 12:51 AM IST (Updated: 2 April 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை, 
தனிப்படை
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் மற்றும் விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த தனிப்படையினர் மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஆலங்குடி அருகே பாதம்பட்டியை சேர்ந்த அண்ணாமலை (வயது 21), பாச்சிகோட்டையை சேர்ந்த நவீனன் (19) ஆகிய 2 பேரை பிடித்தனர். மேலும் இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story