கிணற்றில் மூழ்கி மாணவன் சாவு


கிணற்றில் மூழ்கி மாணவன் சாவு
x
தினத்தந்தி 2 April 2022 12:58 AM IST (Updated: 2 April 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் மூழ்கி மாணவன் பலியானார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்சேரி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் கதிர் (வயது16). 11-ம் வகுப்பு படித்து வந்த இவன் நண்பர்கள் சிலருடன் அந்த பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்க சென்றான். அப்போது அவன் திடீரென நீரில் மூழ்கினான். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் நவீன கருவியின் மூலம் கிணற்றில் மூழ்கிய மாணவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story