விசாரணைக்கு வந்த ஏட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு
சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலத்தகராறு
சிவகங்கை மாவட்டம் கல்லலை அடுத்துள்ள கருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). இவர் தேவகோட்டையை அடுத்துள்ள வேலாயுதபட்டினம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் மருத்துவ விடுப்பில் இருக்கிறார்.
இந்நிலையில் இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்ததாம். அது சம்பந்தமான விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் நேற்று நடைபெற்றது.
ஏட்டு மயங்கி விழுந்தார்
இந்த விசாரணைக்கு வந்திருந்த செந்தில்குமாருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதில் அவர் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story