மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம்


மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம்
x
தினத்தந்தி 2 April 2022 1:12 AM IST (Updated: 2 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஏப்.2-
திருச்சி திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அருகில் இருந்து 75-வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவையொட்டி விளையாட்டு வீரர்கள், மாணவ-மாணவிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்து, ஓட்டத்தில் பங்கேற்றார். இந்த விழிப்புணர்வு ஓட்டமானது ஜங்ஷன் ரவுண்டானா, ெரயில்வே பாலம், மன்னார்புரம் சந்திப்பு, டி.வி.எஸ். டோல்கேட், ஜமால் முகமது கல்லூரி வழியாக அண்ணா விளையாட்டு அரங்கம் சென்றடைந்தது. முன்னதாக வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் உள்ள மகாத்மாகாந்தி, காமராஜர், ராஜாஜி ஆகியோரின் உருவச்சிலைகளுக்கு கலெக்டர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story