மீண்டும் இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு
மீண்டும் இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலுக்கு சிவகாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவகாசி,
மதுரையில் இருந்து சிவகாசி வழியாக காலை, மதியம், மாலை என 3 முறை செங்கோட்டைக்கு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த 3 ரெயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறப்பு ரெயில் என்ற பெயரில் மதுரை-செங்கோட்டை இடையே ஒரு முறையும், செங்கோட்டை-மதுரை இடையே ஒரு முறையும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய ரெயில்வே நிர்வாகம் மதுரை-செங்கோட்டை இடையே பயணிகள் ரெயிலை இயக்க முடிவு செய்தது. நேற்று காலை 7 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட இந்த பயணிகள் ரெயில் காலை 8.50 மணிக்கு சிவகாசிக்கு வந்தது. இந்த ரெயிலை அனைத்து கட்சி பிரமுகர்களும் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
மாநகராட்சி கவுன்சிலர் குமரி பாஸ்கர் ெரயிலுக்கு மாலை அணிவித்தார். ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு சிவகாசி வர்த்கர் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், அசோகன் எம்.எல்.ஏ., தொழில்அதிபர் காளீஸ்வரி செல்வராஜன், கவுன்சிலர்கள் குமரிபாஸ்கரன், ரவிசங்கர், மகேஸ்வரி மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரெயிலை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கார்டுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story