இருசக்கர வாகன பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்


இருசக்கர வாகன பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 2 April 2022 1:16 AM IST (Updated: 2 April 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்குவாரி அமைக்க எதிர்ப்பு ெதரிவித்து இருசக்கர வாகன ேபரணி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மானாமதுரை,

மணல்குவாரி அமைக்க எதிர்ப்பு ெதரிவித்து இருசக்கர வாகன ேபரணி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

 மதுரை விரகனூர் மதகு அணையில் இருந்து மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் மதகு அணை வரை உள்ள வைகை ஆற்றுப் பகுதிகளில் ஏராளமான கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு மணல் குவாரி அமைந்தால் குடிநீர்திட்டங்கள் பாதிக்கப்படும். 
எனவே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காவிரி,வைகை -குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மானாமதுரை அருகே வேதியரேந்தல் மதகு அணையில் இருந்து இருசக்கர வாகனத்தில் விரகனூர் மதகு அணை வரை பேரணியாக செல்ல முயன்றனர். இது பற்றி அறிந்ததும் சிவங்கை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.

பேச்சுவார்த்தை

போலீசார் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அர்ச்சுனன், மாநிலத் தலைவர் மாரிமுத்து, மாநிலச்செயலாளர் ராமமுருகன், நிர்வாகிகள் மதுரைவீரன், உறங்காப்புலி, அய்யனார், மலைச்சாமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், விரகனூர் மதகு அணையிலிருந்து வேதியரேந்தல் மதகு அணை வரை உள்ள வைகை ஆற்றுப் பகுதிகளில் அரசு மணல் குவாரி அமைத்தால் அதனை தடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Next Story