நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 10 மாதம் சிறை
நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 10 மாதம் சிறை விதித்து விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி வாணியர் தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் ராஜ் என்கிற கைப்பிள்ளை ராஜ் (வயது 32). பிரபல ரவுடியான இவர் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரின் இத்தகைய செயல்களை தடுக்கும் விதமாக ராஜிக்கு விக்கிரவாண்டி போலீசார் மூலம் அமைதி பேணுவதற்கான நன்னடத்தை பத்திரத்தை கடந்த 13.7.2021 அன்று விழுப்புரம் உட்கோட்ட நடுவரான கோட்டாட்சியர் வழங்கினார்.
ஆனால் அதை பெற்ற ராஜ், அந்த நன்னடத்தை விதியை மீறினார். இதனால் அவருக்கு 31.3.2022 அன்று முதல் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணை நேற்று கடலூர் மத்திய சிறையில் இருக்கும் ராஜிக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story