ஒரேநாளில் ரூ.1 கோடியே 31 லட்சம் வரி பாக்கி வசூல்


ஒரேநாளில் ரூ.1 கோடியே 31 லட்சம் வரி பாக்கி வசூல்
x
தினத்தந்தி 2 April 2022 1:21 AM IST (Updated: 2 April 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஒரேநாளில் ரூ.1 கோடியே 31 லட்சம் வரி பாக்கி வசூல்

திருச்சி, ஏப்.2-
திருச்சி மாநகராட்சியில் நேற்று முன்தினம் மாநகராட்சி வரி செலுத்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் ரூ.1 கோடியே 31 லட்சம் அளவுக்கு வரி வசூல் நடைபெற்றுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரி பாக்கி நிலுவையில் இருக்கிறது. தற்போது மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாகவே வரி பாக்கி அதிகமாக வசூல் ஆகி வருகிறது. கிட்டத்தட்ட சுமார் 75 சதவீதம் அளவுக்கு வரி வசூல் நடைபெற்று உள்ளது என்று கூறினர்.

Next Story