தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை மணிநகரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் அழகர்சாமி (வயது 38). இவர் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் புதிதாக வீடு கட்டி உள்ளதாகவும், இதனால் கடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அழகர்சாமி நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story