திருச்சி பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு
திருச்சி பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு; மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர்
திருச்சி, ஏப்.2-
டெல்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில், மாணவர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகளில் பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை மாணவ-மாணவிகள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பள்ளி வளாகத்தில் அகண்ட திரை வைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வரும், பரிக் ஷா பே சர்ச்சா நிகழ்வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நவல் கிஷோர் செய்து இருந்தார்.

Related Tags :
Next Story