விற்பனைக்காக வைத்திருந்த 44 லிட்டர் சாராயம் பறிமுதல்


விற்பனைக்காக வைத்திருந்த 44 லிட்டர் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 April 2022 1:40 AM IST (Updated: 2 April 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

விற்பனைக்காக வைத்திருந்த 44 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேப்பந்தட்டை:

சாராயம் விற்பனை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மாவிலிங்கை பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் மாவிலிங்கை கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது படைவெட்டி அம்மன் கோவில் அருகே சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்துள்ள ராமசேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற சுள்ளான்(வயது 35) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது.
கைது
இதையடுத்து சுரேசை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 44 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story