பள்ளி மாணவர் கடத்தலா? போலீசார் விசாரணை


பள்ளி மாணவர் கடத்தலா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 April 2022 1:46 AM IST (Updated: 2 April 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர் கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா(36). இவர்களுடைய மகன் ராஜவேல்(13), முத்துசேர்வாமடம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நாகராஜனின் தந்தை வீட்டில் இருந்து படித்து வந்த ராஜவேல், சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து ராஜவேலை யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story