தலையாட்டி பொம்மை, கைவினை பொருட்கள் விற்பனைக்கு பிரத்யேக அரங்கு
தஞ்சை தலையாட்டி பொம்மைகள், கைவினை பொருட்கள் விற்பனைக்கு பிரத்யேக அரங்கு தஞ்சை ரெயில் நிலையத்தில் தொடங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்;
தஞ்சை தலையாட்டி பொம்மைகள், கைவினை பொருட்கள் விற்பனைக்கு பிரத்யேக அரங்கு தஞ்சை ரெயில் நிலையத்தில் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
கைவினை பொருட்கள்
மத்திய அரசின் 2022-23ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்ததிட்டத்தில் உள்ளூர் கைவினை பொருட்கள் விற்பனையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு, ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் அதற்கான விற்பனை அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரெயில் நிலையங்களில் அந்தந்த உள்ளூர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிரத்யேக அரங்கு
அதன் ஒரு பகுதியாக திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கீழ் இந்த திட்டத்தில் தஞ்சாவூர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தஞ்சையின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் கைவினை பொருட்களான தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், நெட்டி வேலைப்பாடுகள், கலைத் தட்டுகள் மற்றும் வெண்கல சிலைகள் போன்றவற்றை விற்பனை செய்வதற்கென பிரத்யேக அரங்கு தஞ்சை ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
வாழ்வாதாரம் உயரும்
இந்திய ரெயில்வே சார்பில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் விற்பனை அரங்குகள் அமைக்கப்படுவதன் மூலம் உள்ளூர் கலை பொருட்களை நாடறிய செய்வதோடு மட்டுமின்றி, கைவினை கலைஞர்களின் திறன் வளர்ப்பிற்கும், வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்க்கும் துணைபுரியும்.
தஞ்சை ரெயில் நிலையத்தில் வருகிற 8-ந் தேதி தொடங்கி 15 நாட்கள் வீதம் 30 நாட்களுக்கு இத்திட்டதின் கீழ் கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story