நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு


நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
x
தினத்தந்தி 2 April 2022 1:51 AM IST (Updated: 2 April 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

சுரண்டை:

சுந்தரபாண்டியபுரம் அருகே அமைந்துள்ளது விந்தன்கோட்டை கிராமம். இங்கு நேற்று காலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் நாய்கள் கூட்டமாக இருப்பதை அப்பகுதியில் விவசாய வேலைகளுக்கு சென்றவர்கள் பார்த்தனர். உடனடியாக அருகில் சென்று பார்த்தபோது புள்ளிமான் ஒன்று, நாய்கள் கடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சாம்பவர்வடகரை போலீசார் கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மானின் உடலை கைப்பற்றி காட்டுப் பகுதியில் கொண்டு சென்று புதைத்தனர். தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை நாய்கள் விரட்டி கடித்ததில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story