கஞ்சா விற்ற 2 பேர் கைது
சுசீந்திரம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். மணக்குடி ரேஷன் கடை அருகே சென்ற போது 1 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் நாகர்கோவில் அருகே உள்ள கன்னங்குளம் பேபி காம்பவுண்டை சேர்ந்த அப்துல்ரகுமான் என்ற ஆசிக் (வயது 19) என்பவர் பிடிபட்டார். பின்னர் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அப்துல்ரகுமானை கைது செய்தனர்.
இதேபோல் குலசேகரன் புதூர் சந்திப்பில் கஞ்சா விற்றதாக சுசீந்திரம் அருகே உள்ள கீழத்தேரூரை சேர்ந்த முத்தழகன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story