பெருந்துறை அருகே மசாஜ் கிளப்பில் விபசாரம்; மேலாளர் கைது 3 பெண்கள் மீட்பு
பெருந்துறை அருகே மசாஜ் கிளப்பில் விபசாரம் நடத்தியதாக மேலாளர் கைது செய்யப்பட்டார். 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
பெருந்துறை
பெருந்துறை அருகே மசாஜ் கிளப்பில் விபசாரம் நடத்தியதாக மேலாளர் கைது செய்யப்பட்டார். 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
விபசாரம்
பெருந்துறை அருகே ஒரு தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்குள் தனியார் ஒருவர் மசாஜ் கிளப் நடத்தி வந்தார். இந்த கிளப்பில் விபசாரம் நடப்பதாக பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலுக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் சாதாரண உடையில் போலீஸ்காரர் ஒருவர் மசாஜ் கிளப்புக்கு சென்றார்.
அவரிடம் கிளப்பின் மேலாளர் தானேஷ்குமார் என்பவர், இங்கு மசாஜ் செய்வதற்கு ரூ.2 ஆயிரம் வாங்குகிறோம். இதேபோல் உல்லாசமாக இருக்க விரும்புகிறீர்களா? அழகிகள் உள்ளனர். அதற்கு தனியாக ரூ.2 ஆயிரம் தரவேண்டும். பெண்களை தேர்வு செய்கிறீர்களா? என்று 3 பெண்களை அழைத்து, அவரின் முன்னால் நிறுத்தியுள்ளார்.
மேலாளர் கைது
மேலாளர் சொன்னதை கேட்டதும், மாறுவேடத்தில் இருந்த போலீஸ்காரர் என்னிடம் ரூ.2 ஆயிரம்தான் உள்ளது. வெளியே சென்று பணம் கொண்டு வருகிறேன் என்று போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றை கூறினார்.
இதையடுத்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் கிளப்புக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது 3 பெண்களை வைத்து அங்கு விபசாரம் நடப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மசாஜ் கிளப் மேலாளர் தானேஷ்குமாரை கைது செய்தார்கள். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 3 பெண்களையும் மீட்டு கோவையில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.
Related Tags :
Next Story