ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
ஈரோடு வழியாக ரெயிலில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோடு வழியாக ரெயிலில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா
விசாகப்பட்டினத்தில் இருந்து கோவை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.-7 பெட்டியில் சந்தேகப்படும்படியாக ஒரு அட்டை பெட்டி இருந்தது. அந்த அட்டை பெட்டியை போலீசார் திறந்து பார்த்தனர். அப்போது அட்டை பெட்டிக்குள் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த பயணிகள் 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், தென்காசி மாவட்டம் திருமலாபுரம் முத்தாலம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 23), சிவகிரி அருகே உள்ள வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியை சேர்ந்த சுடலைராஜ் என்பவருடைய மனைவி மகாலட்சுமி (24) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் ரெயிலில் கஞ்சா கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story