மைனர் பெண்ணை கற்பழித்து தாயாக்கிய தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
மைனர் பெண்ணை கற்பழித்து தாயாக்கிய தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
மங்களூரு: மைனர் பெண்ணை கற்பழித்து தாயாக்கிய தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
மைனர் பெண்ணை கற்பழித்து...
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் வாமஞ்சூர் பகுதியில் மைனர் பெண் ஒருவள் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மைனர் பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அதேபகுதியை சேர்ந்த தொழிலாளியான வாமன்னா பூஜாரி(வயது 56) என்பவர் வீட்டிற்குள் புகுந்து கற்பழித்துள்ளார். மேலும் வெளியே யாரிடமும் கூறினால் கொன்றுவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன மைனர் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார்.
இதனை பயன்படுத்தி கொண்டு வாமன்னா பூஜாரி, மைனர் பெண்ணை மிரட்டி தொடர்ந்து கற்பழித்துள்ளார். இதனால் சில மாதங்களில் மைனர் பெண் கர்ப்பமானார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மங்களூரு புறநகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாமன்னா பூஜாரியை கைது செய்தனர். இதற்கிடையே மைனர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
10 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்றுமுன்தினம் வழக்கை விசாரணை நடத்தி நீதிபதி நீதிபதி ராதாகிருஷ்ணா தீர்ப்பு கூறினார்.
அதில், மைனர் பெண்ணை கர்ப்பமாக்கி தயாக்கிய வாமன்னா பூஜாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story