கொண்டலாம்பட்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
கொண்டலாம்பட்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கொண்டலாம்பட்டி,
கொண்டலாம்பட்டி அருகே உள்ள வேம்படிதாளம் பகுதி மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 32). சாயப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா (29). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் முருகன் மது குடித்து விட்டு வந்து மனைவி சகிகலாவுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் மனைவி சசிகலா கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார் இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு முருகன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று தாயார் வீட்டிற்கு சென்றிருந்த சசிகலா வீட்டிற்கு வந்தார். அப்போது நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக இருந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ேமலும் அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story