சேலம் ராஜகணபதி கோவிலில் பக்தர்கள் ரூ.19¼ லட்சம் காணிக்கை
சேலம் ராஜகணபதி கோவிலில் பக்தர்கள் ரூ.19¼ லட்சம் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
சேலம்,
சேலம் டவுனில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. கோவிலில் 4 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நேற்று காலை ராஜகணபதி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு சுகவனேசுவரர் கோவில் வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி, ராஜகணபதி கோவில் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.19 லட்சத்து 40 ஆயிரத்து 281 ரொக்கமும், 82 கிராம் 500 மில்லி தங்கமும், 585 கிராம் 200 மில்லி வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்ததாகவும், கத்தார் நாட்டின் ரியால் ஒன்று இருந்ததாகவும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி உண்டியல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story