சென்னையில், ஒரு வாரத்தில் நடந்த கஞ்சா வேட்டையில் 129 பேர் கைது - 4,600 போதை மாத்திரைகள் பறிமுதல்


சென்னையில், ஒரு வாரத்தில் நடந்த கஞ்சா வேட்டையில் 129 பேர் கைது - 4,600 போதை மாத்திரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 April 2022 9:25 AM IST (Updated: 2 April 2022 9:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில், ஒரு வாரத்தில் நடந்த கஞ்சா வேட்டையில் 129 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4,600 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை, 

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வேட்டையில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 129 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 77 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

4,600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 ஆட்டோக்கள் மற்றும் 3 மோட்டார்சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டது. கஞ்சா வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story